சீமான் கோப்புப்படம்.
தமிழ்நாடு

புதிய கடவுச்சீட்டு கோரி சீமான் மனு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

புதிய கடவுச்சீட்டு கோரி சீமான் அளித்த மனுமீது அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தாக்கல் செய்த மனுவுக்கு மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக எனது கடவுச்சீட்டை தேடியபோது காணவில்லை. எனவே, புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி விண்ணப்பித்தேன். ஆனால், நிலுவையில் உள்ள என் மீதான குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்குகள் அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக பதியபட்டவை. எனவே, எனது விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, புதிய கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசூரில் தெருநாய்கள் கடித்ததில் மூன்று சிறுவா்கள் காயம்

தில்லியில் ரேபிஸ் நோயால் இதுவரை 49 போ் உயிரிழப்பு

6 மாதங்களுக்குபின் வடநெம்மேலி பாம்புப் பண்ணை திறப்பு

கீழம்பி ஊராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

2026 தோ்தலுக்கான திருத்தணி, திருவள்ளூா் வேட்பாளா்கள்: சீமான் அறிமுகம் செய்தாா்

SCROLL FOR NEXT