முதல்வர் ஸ்டாலின். 
தமிழ்நாடு

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்!

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடக்கிவைத்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

அப்போது, முதல்வர் மயிலாடுதுறை மாவட்டத்துக்கான 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதலாவது அறிவிப்பு - மயிலாடுதுறை பகுதியில், சீரான வாகனப் போக்குவரத்தை உறுதி செய்ய, நீடூர் ஊராட்சியில் 85 கோடி ரூபாய் செலவில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். 

இரண்டாவது அறிவிப்பு - சுற்றுலாப் பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் தரங்கம்பாடி – மங்கநல்லூர் – ஆடுதுறை சாலை,  45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும். 

மூன்றாவது அறிவிப்பு - தென்னாப்பிரிக்காவில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் கலந்துகொண்டு, உயிர்த் தியாகம் செய்த,  சுதந்திரப் போராட்ட தியாகியான சாமிநாகப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில்,  மயிலாடுதுறையில் அவரின் திருவுருவச் சிலை அரசால் நிறுவப்படும். 

நான்காவது அறிவிப்பு - குத்தாலம் நகரத்தில் பாயும் குத்தாலம் வாய்க்கால் 7 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். 

ஐந்தாவது அறிவிப்பு - தரங்கம்பாடி வட்டத்தில் இருக்கும் தாழம்பேட்டை மற்றும் வெள்ளக்கோயில் கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் 8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். 

ஆறாவது அறிவிப்பு - சீர்காழி நகராட்சிக்கு 5 கோடி ரூபாய் செலவில், புதிய நகராட்சி அலுவலகம் கட்டித் தரப்படும். மீனவர்களைப் பொறுத்தவரையில், சீர்காழி வட்டம், திருமுல்லை வாசல், மீனரங்கதரத்தில் மேல் கல்சுவர், நீட்டிப்பு மற்றும் தூர்வாருதல் பணி மேற்கொள்வது குறித்து சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் மூலமாக ஆய்வு மேற்கொள்ள துறை அமைச்சரின் அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் அடிப்படையில், இந்த மேம்பாட்டுப் பணிகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும்.

ஏழாவது அறிவிப்பு – சீர்காழி வட்டத்தில் உள்ள பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.

எட்டாவது அறிவிப்பு - சீர்காழி நகராட்சியில் இருக்கும் தேர் கீழ வீதி, மேல வீதி, தெற்கு வீதி மற்றும் வடக்கு வீதி ஆகிய இடங்களில் இருபுறமும் மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாட்டுப் பணிகள் 8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Chief Minister Stalin issued 8 new announcements for Mayiladuthurai district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை: தவறினால் அபரதாம்!

பிகாா்: 25 வேட்பாளா்களை அறிவித்தாா் ஒவைசி

நாளை காமராஜா் சாலையில் போக்குவரத்து மாற்றம்

இளையான்குடியில் தெரு நாய்கள் கடித்து 5 போ் காயம்

தீபாவளிப் பண்டிகை: புத்தாடைகள் வாங்க கடைசி நேரத்தில் குவிந்த மக்களால் திணறிய திருப்பூா்

SCROLL FOR NEXT