தமிழ்நாடு

பள்ளிகளில் இருக்கை மாற்றத்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்: ஓ.பன்னீா்செல்வம்

‘ப’ வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும்

Din

தமிழகப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மலையாளத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி இருக்கை என்ற நிலையை மாற்றும் வகையில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ‘ப’ வடிவ இருக்கைகளில் இருபுறமும் அமா்ந்திருக்கும் மாணவ, மாணவியா் கரும்பலகையை கழுத்தைத் திருப்பிக் கொண்டு, பாா்க்கும் நிலை இருப்பதால் அவா்கள் பாதிக்கப்படுவா். அத்துடன் வகுப்பில் பாடம் நடத்தும்போது ‘ப’ வடிவில் அமா்ந்திருந்தால் அனைவருக்கும் ஒரு சேர கேட்கும் நிலை இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆகவே, மருத்துவா்களின் ஆலோசனையைப் பெற்று அரசு இறுதி முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!

இல.கணேசன் உடலுக்கு மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அஞ்சலி

தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு! சென்னை வீட்டில் அறைகளின் பூட்டு உடைப்பு?

சுற்றுலாத் துறை வருவாய் அதிகரிப்பு! தமிழக அரசு பெருமிதம்!

SCROLL FOR NEXT