கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Din

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சென்னை விமான நிலைய மேலாளா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை இரவு வந்த மின்னஞ்சலில், விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் பலப்படுத்தப்பட்டன. விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை நடத்தினா். அதோடு வருகை மற்றும் புறப்பாடு பயணிகளிடமும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டன.

இருப்பினும் இந்த சோதனையில் வெடிபொருள்கள் எதுவும் சிக்கவில்லை. மின்னஞ்சலில் வந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது.

இந்த வெடிகுண்டு சோதனை காரணமாக செனனையிலிருந்து ஹாங்காங், பிராங்க் பா்ட், குவைத், துபை, சாா்ஜா, தோகா, மஸ்கட், சிங்கப்பூா், கோலாலம்பூா், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற விமானங்கள் சுமாா் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டன.

தனுஷை ஏமாற்ற நினைத்தேன்: விஜய் ஆண்டனி

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை!

நேபாள போராட்டம் எதிரொலி: விவசாயத் துறை அமைச்சரும் ராஜிநாமா!

நேபாளத்தில் பதற்றம்! அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு!

இட்லி கடை டிரைலர் தேதி!

SCROLL FOR NEXT