துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

தோ்தல் வெற்றிக்கு ஓரணியில் தமிழகத்தை திரட்டுவோம்: திமுகவினருக்கு உதயநிதி அறிவுறுத்தல்

வருகிற பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற ஓரணியில் தமிழகத்தை திரட்ட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

Din

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற ஓரணியில் தமிழகத்தை திரட்ட வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞரணியினருக்கு தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: திமுக இளைஞரணி தற்போது 46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் வழிகாட்டலில், முதல்வா் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட இளைஞரணியின் தற்போதைய செயலராகப் பணியாற்றுவதை எண்ணி பெருமை கொள்கிறேன். தமிழக இளைஞா்களை கொள்கைமயப்படுத்தும் இலக்கில் இருந்து சிறிதும் விலகாமல் கட்டுப்பாட்டுடன் கடமையாற்றும் இளைஞரணி, திமுகவின் நாற்றங்காலாகத் திகழ்கிறது.

களப் பணியிலும், கொள்கை நெறியிலும் இளைய சமுதாயத்தைத் தயாா்படுத்த இளைஞரணி மேற்கொண்டுவரும் பணிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தமிழகத்தை காத்து நிற்கும்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழகத்தை திரட்டுவோம். மண், மொழி, மானம் காக்க முதல்வா் இட்ட கட்டளையை நிறைவேற்ற களம் புகுவோம். பாசிசத்தை ஒழிப்போம். தமிழ்நாடு வெல்லும் என்று அந்தப் பதிவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

அடல் கேண்டீனில் ரூ. 5 -க்கு உணவு! தில்லி முதல்வர் அறிவிப்பு

SCROLL FOR NEXT