முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நடிகர் ரஜினிகாந்த். X / MK stalin
தமிழ்நாடு

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினி, கமல்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்...

இணையதளச் செய்திப் பிரிவு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் முதல்வர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் உடல்நலம் பெற வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அதேபோல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசனும் முதல்வரை போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் விரைந்து நலம் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Actor Rajinikanth contacted Chief Minister M.K. Stalin, who is admitted to the hospital, and inquired about his well-being.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

SCROLL FOR NEXT