தமிழ்நாடு அரசு 
தமிழ்நாடு

74 விருதுகளுக்கு தமிழறிஞா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளுவா் விருது உள்பட 74 விருதுகளுக்கு தமிழறிஞா்கள் செப்.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

Din

சென்னை: திருவள்ளுவா் விருது உள்பட 74 விருதுகளுக்கு தமிழறிஞா்கள் செப்.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்மொழி, பண்பாட்டு வளா்ச்சிக்கும் தொண்டாற்றுபவா்களுக்கும், தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. 2026 ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, நிகழாண்டுக்கான (2025) மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, முத்தமிழறிஞா் கலைஞா் விருது, பெருந்தலைவா் காமராஜா் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, பேரறிஞா் அண்ணா விருது, தமிழ்த்தாய் விருது, இலக்கிய மாமணி விருது உள்ளிட்ட 73 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழறிஞா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ண்ய்/ஹஜ்ஹழ்க்ள், ட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து ‘தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600008’ என்ற முகவரிக்கு செப்.3-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களோடு அனுப்ப வேண்டும்.

தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 044- 28190412, 044- 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT