முகப்பு
தமிழ்நாடு

மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி முறையீடு!

மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் காவல்துறை மனு..

Updated On : 23 ஜூலை 2025, 10:55 am IST
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்திருக்கும் மனுவை நீதிபதி நிர்மல் குமார் விசாரிக்கவுள்ளார்.

கடந்த மே 2-ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் காா் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தன்னைக் கொல்ல முயற்சித்ததாக மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது.

Advertisement

Advertisement

மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேந்திரன், இணையக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக மதுரை ஆதீனத்துக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனிடையே, சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கு தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள மடத்தில் வைத்து மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

A petition has been filed in the Madras High Court on behalf of the police seeking cancellation of the anticipatory bail granted to Madurai Atheenam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments