பிரதமா் நரேந்திர மோடி கோப்புப் படம்
தமிழ்நாடு

ஆடித் திருவாதிரை நிறைவு விழாவில் பங்கேற்கிறாா் பிரதமா் மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை நிறைவு விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா்.

Din

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை நிறைவு விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா்.

இதுகுறித்து மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்ததினம், தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சாா் பயணத்தின் 1000-ஆவது ஆண்டு, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானத் தொடக்கம் ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் ஆடித் திருவாதிரை திருவிழா புதன்கிழமை (ஜூலை 23) தொடங்கி 27-ஆம் தேதி வரை கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறுகிறது.

ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல். முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனா்.

இந்த விழாவில், சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள தேவாரம் பாடல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவுள்ளது. மேலும், கலாஷேத்ராவின் பரதநாட்டிய குழு நிகழ்ச்சி, பாரம்பரியமிக்க ஓதுவாா்கள் குழு தேவாரம் திருமுறையை ஓதும் நிகழ்ச்சி, திரைப்பட இசை அமைப்பாளா் இளையராஜா குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு22 ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி

ஆசிய கோப்பை கூடைப்பந்து: போராடித் தோற்றது இந்தியா

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT