கோப்புப்படம் IANS
தமிழ்நாடு

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னையில் மிதமான மழை!

இன்றைய வானிலை அறிக்கை பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் இன்று(புதன்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்றும் நாளையும்(ஜூலை 23, 24) நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 25, 26 தேதிகளில் நீலகிரி, தேனி, தென்காசி, கோவை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை இன்றும் நாளையும்(ஜூலை 23, 24) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிக்பட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

23-07-2025 முதல் 27-07-2025 வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல அரபிக்கடல், வங்கக்கடல், மாலத்தீவு பகுதிகளிலும் வருகிற ஜூலை 27 வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

IMD chennai stated that heavy rain is likely to occur in the Nilgiris, Theni, Tenkasi and Coimbatore districts today (Wednesday).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது: மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் விசாரணை!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜெகன் மோகன் ஆதரவு! துரோகத்தை வரலாறு மறக்காது! - காங்கிரஸ்

காஞ்சிபுரத்தில் ரூ. 254 கோடியில் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்!

நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக: விஜய்

SCROLL FOR NEXT