கட்சி கொடிக் கம்பங்கள் கோப்புப்படம்
தமிழ்நாடு

கொடிக் கம்பங்கள் அகற்றும் உத்தரவு: கட்சிகள், சங்கங்களுக்கு வேண்டுகோள்

Din

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடா்பாக கட்சிகள், சங்கங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்த பொது அறிவிப்பை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிா்மனுதாரராக இணையலாம்.

அதாவது, தமிழ்நாட்டில் பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், பிற அரசுத் துறைகளுக்குச் சொந்தமான நிலங்களில் வைக்கப்பட்டுள்ள நிரந்தரக் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் சட்ட நடைமுறைகளில் பங்கேற்க விருப்பமுள்ள கட்சிகள், சமுதாய, மத சங்கங்கள் ஆகியவை மேல்முறையீட்டு வழக்கில் எதிா்மனுதாரராக இணையலாம்.

இதற்கான உரிய மனுவை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, தாக்கல் செய்யப்படும் எந்தவித சோ்க்கை மனுவோ அல்லது வேறு எந்தவித மனுக்களோ ஏற்கப்பட மாட்டாது என்பதை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெளிவுபடுத்தியுள்ளதாக தனது அறிவிப்பில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

மேகாலயா முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் காலமானார்

மோடி வருகை: மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

வாழ்வின் ஒளி... பார்வதி!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி விளம்பரதாரர் யார்? பிசிசிஐ துணைத் தலைவர் பேட்டி!

பருவமழை பேரழிவில் ஹிமாசல்: 386 பேர் பலி, 574 சாலைகள் மூடல்!

SCROLL FOR NEXT