Joy Crizildaa
தமிழ்நாடு

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்சத்திரங்கள் என பல்வேறு முக்கியஸ்தர்களின் இல்ல விழாக்களில் ஆர்டர் எடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் விருந்து ஏற்பாடு செய்து வருகிறார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இவருக்கும் ஸ்ருதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் அவரது மனைவி ஸ்ருதிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வந்தன. அதற்கேற்றவாறே ஜாய் கிரிஸில்டாவின் சமூக ஊடகப் பதிவுகளும் இருந்தன. இருப்பினும், இதுகுறித்து இருவரும் எந்தவித பதிலோ கருத்தோ வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், தான் 6 மாதகாலமாக கருவுற்றிருப்பதாகக் கூறி, மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தை ஜாய் கிரிஸில்டா பதிவிட்டுள்ளார். மேலும், அவரின் நெற்றியில் மாதம்பட்டி ரங்கராஜ் குங்குமம் வைப்பதுபோலவும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்திலும் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என்று ஜாய் கிரிஸில்டா குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஆனால், ஸ்ருதியுடன் விவாகரத்து செய்துவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜோ ஸ்ருதியோ இதுவரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படியிருக்கையில், எவ்வாறு மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியும்? முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்துகொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்!

Chef Madhampatty Rangaraj marries designer Joy Crizildaa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT