ரூ. 10,000-ல் கடற்கரைத் திருமணம்! தமிழக அரசின் கலக்கல் திட்டம்!
கடற்கரைத் திருமணம் குறித்த தமிழக அரசின் புதிய அறிவிப்பு.
ரூ. 10,000-ல் கடற்கரைத் திருமணத்தை நடத்தும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடுத்தர வர்க்க மக்களின் மிகப்பெரிய கனவு கடற்கரைத் திருமணம். கடற்கரைத் திருமணதை நடத்த வேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவாகும் சூழல் உள்ளது. இது எளிய மக்களுக்கு சாத்தியமில்லாத நிலையில், எளிய மக்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடற்கரைத் திருமணத்தை குறைந்த செலவில் நடத்த தமிழக அரசு கலக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கீழ் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உணவகங்கள் உள்ளது. அதேபோல, கோயில்கள், சுற்றுலா இடங்களுக்குச் செல்வதற்கும் ஏராளமான திட்டங்கள் உள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புதிதாக கடற்கரைத் திருமணம் நடத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பெரும்பாலும் வசதியானவர்கள், சினிமா பிரபலங்கள் மட்டுமே இந்த வகையானத் திருமணத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தற்போது நடுத்தர வர்க்க மக்களின் ஆசையையும் நிறைவேற்றும் வகையில் பீச் வெட்டிங் எனப்படும் கடற்கரைத் திருமணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரத்தில் கடற்கரைத் திருமணத்தை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையிடம் அனுமதி பெற்று திருமணத்தை நடத்திக்கொள்ளலாம்.
தொடர்ந்து, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
கட்டண விவரங்கள்:
பராமரிப்பு மற்றும் முன்பதிவு கட்டணமாக ரூ. 10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவுக் கட்டணமானது சைவத்துக்கு ரூ. 700-லிருந்தும் அசைவத்துக்கு ரூ. 1100-லிருந்தும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுதிக் கட்டணம் தங்கும் அறைக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000 விலையில் இருந்து கிடைக்கும்.
திருமணத்திற்கான அலங்காரங்கள், மேடை மற்றும் விளக்கு போன்றவற்றை திருமண வீட்டாரே, தனியார் அமைப்புகளைத் தொடர்புகொண்டு தங்களுக்குப் பிடித்தமான முறையில் அலங்கரிக்கலாம்.
விண்ணிப்பிக்கும் முறை
கடற்கரைத் திருமணம் தொடர்பான திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்வோர் https://ttdconline.com என்ற தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணையதளத்தில் விண்ணிப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Tamil Nadu government has introduced a new scheme to hold beach weddings for Rs. 10,000.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.