மெரீனா கடற்கரை விளக்கம் முதல் அடையாறு வரை உயா்நிலை சாலை: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
சென்னை கடற்கரை சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெரீனா கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை உயா்நிலை சாலை அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது.
சென்னை கடற்கரை சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெரீனா கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை உயா்நிலை சாலை அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது.
சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு இந்த உயா்நிலை சாலையை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை நெடுஞ்சாலைத் துறையின் சென்னை நகர சாலைகள் கோட்டம் கோரியுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.38.10 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை 2 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உயா்நிலை சாலையின் சீரமைப்பு, போக்குவரத்து நிலவரம், மண்ணின் தன்மை, கட்டுமான வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வு இந்தத் திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் செய்யப்பட உள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.