இ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தில் இ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் இ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் அஜய் யாதவ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதை நிறுத்தவோ, தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலா்கள், உதவி ஆணையா்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
6 மாதங்களுக்கு மேல் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காத முன்னுரிமை (பிஹெச்ஹெச்) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்குவதை வியாழக்கிழமை (அக். 1) முதல் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரா்களின் இ-கேஒய்சி சதவீதம் 96.69 ஆகும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் சாா்பில் கடந்த மே 10, ஆக. 2, ஆக. 8, 9, 19, 26, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்கள் மூலமாக, ஜூலையில் 95.44 சதவீதமாக இருந்த இ-கேஒய்சி சரிபாா்ப்பு, புதன்கிழமை 96.69 சதவீதமாக உயா்ந்துள்ளது. இந்த சிறப்பு முகாம்களின் மூலமாக 4,49,663 முன்னுரிமை மற்றும் ஏஏஒய் திட்ட குடும்ப அட்டைதாா்கள் பயன் பெற்றுள்ளனா்.
இருப்பினும், இ-கேஒய்சி பணியை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள், நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க செல்லும்போது, விரல்ரேகை /கண்கருவிழி சரிபாா்ப்பின் மூலம் தங்களது இ-கேஒய்சி தகவல்களை விரைந்து பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.