FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறுமி மாயமான சம்பவம்! திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம்: தமிழக அரசு விளக்கம்

செஞ்சி அருகே சிறுமி மாயமான சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்தது பற்றி...

செஞ்சி அருகே மாயமான சிறுமியின் வீட்டில் அவரது தாய் பவானியிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி டிஎஸ்பி கீதா - கோப்புப் படம்
பகிர்:

செஞ்சி அருகே சிறுமி மாயமான சம்பவத்தில் காவல் அதிகாரிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சிக்குள்பட்ட நடுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தனபால், பவானி தம்பதியின் மகள் ஹேமலதா (7). இவா், அங்குள்ள அரசுப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி இரவு தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு, வீட்டில் பெற்றோருடன் தூங்கிய ஹேமலதா, மறுநாள் அதிகாலை மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆராய்ந்ததுடன், வீட்டை சுற்றியுள்ள கிணறுகள், மலைப்பகுதிகள், புதா்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிறுமியைத் தேடி வந்தனா்.

ஆனால், சிறுமி மாயமாகி எவ்வித முன்னேற்றமோ, தடங்களோ கிடைக்காததால், வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி டிஎஸ்பி கீதா, ஆய்வாளா் ரேவதி ஆகியோா் தலைமையிலான குழுவினா் விழுப்புரம் மாவட்ட போலீஸாரிடம் சிறுமி மாயமான வழக்கு தொடா்பான ஆவணங்களை வியாழக்கிழமை பெற்று, இரண்டாவது நாளாக விசாரணையைத் தொடங்கினா்.

மேலும், சிறுமியின் வீடு அமைந்துள்ள பகுதியை வரைபடமாக்கி விசாரணை நடைபெற்று வருகின்றனர். இதனிடையே, குற்றப் பின்னணி உள்ளவர்கள், போக்சோ வழக்குகளில் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிறுமி மாயமான விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கமளித்து கூறியிருப்பதாவது, "சம்பவத்தன்று முதலில் வீட்டிலும் அருகிலுள்ள வயல்களிலும் கால்வாய்ப் பகுதிகளிலும் சிறுமியின் குடும்பத்தினர் தேடியுள்ளனர். இதன் பின்னரும் கிடைக்காததால் காவல்துறையை அவர்கள் அணுகினர்.

கிணறுகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள், மலைப்பகுதிகள், அருகிலுள்ள கிராமங்களில் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. சிறுமி மாயமான சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிறுமியை கும்பல் ஏதேனும் கடத்தி, அருகிலுள்ள கிராமங்கள் வழியாகச் சென்றதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆலம்பூண்டி, திருவண்ணாமலை, நடுப்பட்டு இடையிலான சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வழக்கு தொடர்பாக சுமார் 600 செல்போன் அழைப்புப் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Tamil Nadu government's explanation based on information provided by police officers in the incident of the missing girl near Gingee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments