Thol. Thirumavalavan
தமிழ்நாடு

முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்!

முதல்வர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லையா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி

இணையதளச் செய்திப் பிரிவு

ராணிப்பேட்டையில் விசிக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் திருமாவளவன், முதல்வர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளரும் நகர்மன்ற துணைத்தலைவருமான ரமேஷ்கர்ணாவும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், இந்து மதத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் வெறுப்பதில்லை; ஆனால், சனாதன தர்மத்தை நிச்சயமாக ஏற்காது. அந்த வகையில்தான், மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கும் அரசுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கைகோர்த்துள்ளது.

எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தாலும் `ஏன் வேண்டாம்?’ என்று சொல்கிறீர்கள் என்று சிலர் கேட்கின்றனர். நான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் இல்லையா? நானும் ரௌடிதான் என்று யார்யாரோ கிளம்புகிறார்கள்..

ஆனால், கடந்த 35 ஆண்டுகளாக பொது வாழ்க்கையிலும், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையிலும் நான் இருக்கிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் அரசியல் பேசியிருக்கிறேன். ஜெயலலிதாவுடனும் அரசியலில் பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தற்போது, முதல்வர் ஸ்டாலினுடன் பயணிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

ஆனால், என்னை ஏன் துணை முதல்வர் என்று சொல்கிறீர்கள்? முதல்வர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லையா? இரண்டில் யார் அதிகாரம் படைத்தவர்கள் என்பது விவாதம் அல்ல. இருப்பினும், இவ்வாறான ஆசை காட்டினால் நான் வந்து விடுவேன் என்று சிலர் நினைக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஏன், எதற்காக? சொல்லுங்கள் தன்கர்ஜி!

Do I not deserve to be the CM says VCK Chief Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT