சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நிகழ் கல்வியாண்டிலேயே அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிகழாண்டுக்கான (2025}2026) இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 7}ஆம் தேதி தொடங்கியது. பின்னர், கலந்தாய்வு வாயிலாக பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே பிளஸ் 2 பொதுத் தேர்வில், தவறிய மாணவர்களுக்காக உடனடி துணைத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிகழ் கல்வியாண்டிலேயே உயர்கல்வி பயில ஏதுவாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.