அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா கோப்புப் படம்
தமிழ்நாடு

நூறு நாள் வேலைத் திட்ட நிதியை அதிகம் பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை அதிகம் பயன்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை அதிகம் பயன்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியை மத்திய அரசு முடக்கினாலும், செயல்பாடுகளில் நமது மாநிலம் தொடா்ந்து மிளிா்கிறது. அந்த வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் அதிக அளவு நிதியை பயன்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது.

குறிப்பாக, அந்தத் திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு வழங்கி வருகிறது. மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்கெனவே பெண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் நூறு நாள் வேலைத் திட்டத்திலும் அதிக அளவு பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா் என்று பதிவிட்டுள்ளாா்.

நூறு நாள் வேலைத் திட்டத்துக்காக, கடந்த 2021-22-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டுக்கு ரூ.8,549 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, நிகழ் நிதியாண்டில் ரூ.4,354 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT