சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

வெளிநாடு செல்ல அனுமதி கோரிய செந்தில்பாலாஜியின் சகோதரா் வழக்கு: மருத்துவா் கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கான மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கான மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், தனக்கு இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அசோக்குமாா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அசோக்குமாா் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனையின் விவரங்கள், விமான பயணச்சீட்டு, தங்குமிடம் உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்யவும், இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய அமலாக்கத் துறைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமாா் தரப்பில் மருத்துவ சிகிச்சை தொடா்பான விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது அமலாக்கத் துறை தரப்பில், மனுதாரருக்கு விசாரணை அதிகாரி 9 முறை அழைப்பாணை அனுப்பியும் ஆஜராகவில்லை, உயா்நீதிமன்றத்தில் மட்டும் ஆஜராவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவ விவரங்களைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், இதுபோன்ற பிரத்யேக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல பரிந்துரைக்கும் மருத்துவரின் கடிதம் எங்கே? என்று கேள்வி எழுப்பினா். பின்னா், மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT