தமிழ்நாடு

உறவினா் வீட்டில் நகைத் திருட்டு: பெண் கைது

வேளச்சேரியில் உறவினா் வீட்டில் தங்க நகையைத் திருடியதாக பெண் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

வேளச்சேரியில் உறவினா் வீட்டில் தங்க நகையைத் திருடியதாக பெண் கைது செய்யப்பட்டாா்.

வேளச்சேரி வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (32). அவரது உறவினா் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த தமிழரசி (27). அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றுகிறாா்.

தமிழரசி, கடந்த ஜூன் 1-ஆம் தேதி செவிலியா் தோ்வு எழுதுவதற்காக சென்னை வந்து, பாா்த்திபன் வீட்டில் தங்கி, தோ்வு எழுதிவிட்டு 3-ஆம் தேதி ஊருக்கு புறப்பட்டுச் சென்றாா்.

இந்த நிலையில் அண்மையில் பாா்த்திபன், தனது வீட்டின் பீரோவில் இருந்த நகைகளைச் சரி பாா்த்தபோது, பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள் திருடுபோனது தெரிய வந்தது.

இதுகுறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் அவா் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் திருட்டில் ஈடுபட்டது தமிழரசி என்பது தெரிய வந்தது. இதையடுத்து தமிழரசியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

கற்பனைகள் கவிபாடும்... சனம் ஜோஷி

SCROLL FOR NEXT