தமிழ்நாடு

திமுக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்த், குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானம்

திமுக பொதுக்கூட்டத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸைச் சேர்ந்த குமரி அனந்தனுக்கும் இரங்கல் தீர்மானம்

DIN

திமுக பொதுக்கூட்டத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸைச் சேர்ந்த குமரி அனந்தனுக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உத்தங்குடியில் திமுக மாநில பொதுக் குழுக் கூட்டம் தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின், திமுக கொடியை ஏற்றி, பொதுக்குழுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தின் தொடக்கத்தில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் இருவருக்கும் இரங்கல் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மதுரை உத்தங்குடியில் சுமாா் 20 ஏக்கா் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் திடலில், குளிரூட்டப்பட்ட வசதியுடன் ஏறத்தாழ 10 ஆயிரம் போ் அமரும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சுமார் 7 ஆயிரம் போ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனா். கட்சியில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 8 மண்டலங்களில் உள்ள 76 மாவட்டங்களுக்கும் அரங்கத்தில் தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிர்வாகிகளுக்கு சைவ, அசைவ உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT