முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு!

ஒரே நாளில் 2 முறை தங்கம் விலையுயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Updated On : 23 செப்டம்பர், 2025 at 9:54 AM
தங்கம் விலை மீண்டும் உயர்வு
பகிர்:

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. சமீப நாள்களாக 71 ஆயிரமாக இருந்த தங்கம் விலை 72 ஆயிரத்தைத் தாண்டியது மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையான இன்று காலை நிலவரப்படி சென்னையில் கிராம் ஒன்றுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,950-க்கும், ஒரு சவரன் ரூ. 240 உயர்ந்து ரூ. 71,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், மாலையில் வர்த்தகம் நிறைவுபெறும்போது தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரேநாளில் இரண்டாவது முறை தங்கம் விலையுயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று மட்டும் தங்கம் விலை, காலையில் ரூ. 240, மாலையில் ரூ.880 என ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும், ஒரு கிராம் ரூ. 9,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலை மாற்ற இல்லாமல் ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து கிராம் ஒன்று 9 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனிவரும் காலங்களில் தங்கம் விலை மேலும் உயரும் என நகைமதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →