கோப்புப்படம்.  
தமிழ்நாடு

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட்டன.

DIN

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட்டன.

தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்பட்டது.

அதேபோன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப். 7 முதல் 17-ஆம் தேதி வரையும், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப். 8 முதல் 24-ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு ஏப். 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் திறக்கப்பட்டன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு, திறப்புக்காக பள்ளிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டன.

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: இன்று தண்டனை விபரம் அறிவிப்பு

முதல் நாளில் பள்ளி வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், நலத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT