முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

பயத்தில் ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி...

DIN

நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவோம் என பயந்து மாற்றுத்திறனாளிகள் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

"அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி சொல்லக்கூடிய வகையில் பிரசாரம் நடைபெறவிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது எதிர்பார்த்ததுதான்; அது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை.

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக கவுன்சிலர் மனு!

கரூர் தவெக கூட்ட நெரிசல் பொதுநல வழக்கு இன்று விசாரணை!

தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக! முதல்வர் ஸ்டாலின்

மாய ஜாலக்காரி... கீர்த்தி சுரேஷ்!

இந்திய சினிமா இதுவரை கண்டிராதது... காந்தாரா பற்றி சந்தீப் வங்கா!

SCROLL FOR NEXT