முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.
இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய பிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.