சுங்கச்சாவடி  கோப்புப்படம்
தமிழ்நாடு

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை!

எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை!

DIN

மதுரை: மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை(ஜூன் 3) உத்தரவிட்டது.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள எலியார்பத்தி என்னும் இடத்தில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் கடந்த 2011-ஆம் ஆண்டுமுதல் எந்த பராமரிப்புப் பணியும் செய்யப்படவில்லை. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. பேருந்துகள் அடிக்கடி பழுதாகின்றன. மேலும், அடிக்கடி  விபத்துகளும் நிகழ்கின்றன. 

இதனையடுத்து, சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைக்கும் வரை எலியார்பத்தியிலும் புதூர் பாண்டியபுரத்திலும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையிட்டுள்ளதுடன், எலியார்பத்தி சுங்கச் சாவடி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

வார பலன்கள் - கன்னி

வார பலன்கள் - சிம்மம்

கீழவைப்பாறு விண்ணேற்ற மாதா கோயில் 468-வது ஆண்டுத் திருவிழா!

SCROLL FOR NEXT