கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி: நிபந்தனையுடன் அனுமதி!
கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...
தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உள்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், ”சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளைகாட்டி காவல் துறையினர் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள்” என்று வாதிட்டார்.
இந்த நிலையில், இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, ”ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் ரூ. 25 ஆயிரத்தை செலுத்த வேண்டும்.
இந்தப் பணத்தை கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை தூர் வாரப் பயன்படுத்தலாம்.” என்ற நிபந்தனையை விதித்து ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட்டார்.
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு