ஜூன் 10 முதல் 3 நாள்களுக்கு கனமழை!
தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை...
தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மண்டல ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 6 முதல் 8 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 10ல் கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 11ல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 12ல் வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை..
இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையை பொருத்தவரை..
வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு? வார பலன்கள்!