ட்ரீபேங்க் அறக்கட்டளை உரிமையாளர் கோபால் முல்லைவனத்துக்கு விருது வழங்கி கௌரவிக்கும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலை பொதுமேலாளர் (தமிழ்நாடு) சித்தார்த் சொந்தாலியா. உடன் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன்.  DPS
தமிழ்நாடு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்கல்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்பட்டது.

DIN

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் உலக சுற்றுச்சூழல் நாள், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம் என்ற கருப்பொருளுடன், எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

விழாவில் ட்ரீபேங்க் அறக்கட்டளையின் உரிமையாளர் கோபால் முல்லைவனத்துக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலை பொது மேலாளர் (தமிழ்நாடு) சித்தார்த் சொந்தாலியா விருது வழங்கி கௌரவித்தார்.

அலுவலக வளாகத்தில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன், முதுநிலை பொது மேலாளர் சித்தார்த் சொந்தாலியா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

தொழிலாளர்களுக்காகச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முழக்கங்கள் எழுதும் போட்டியும் நடத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு, அலுவலக ஊழியர்களுக்கு செடிகளும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT