பக்ரீத்: பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை 
தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இன்று இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர்.

DIN

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் இன்று காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதங்களில் 12வது மாதமாக இருக்கும் துல் ஹஜ்ஜின் 10வது நாள்தான் பக்ரீத் பண்டிகை.

இஸ்லாமிய மக்கள், ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்து மிகச் சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகையாக இருப்பதும் இந்த பக்ரீத் பண்டிகைதான். இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் என கூறப்படுகிறது.

பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த இடங்களில், மிக அமைதியான முறையில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

இஸ்லாமிய மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள். சிறப்புத் தொழுகை நடத்திய பிறகு, ஏழை மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சியை தானமாக அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு

சிவப்பு கம்பள வரவேற்பு... பிரணிதா!

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT