கனமழை எச்சரிக்கை Center-Center-Bhubaneswar
தமிழ்நாடு

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்...

DIN

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 10ல் கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 11ல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 12ல் வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை..

இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொருத்தவரை..

வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்கள்..

ஜூன் 8 முதல் 11ஆம் தேதி வரை தென்தமிழக மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT