இளையராஜா 
தமிழ்நாடு

கோவையில் என் காலடி படாத இடமே இல்லை: இளையராஜா

கோவையில் என் காலடி படாத இடமே இல்லை என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

DIN

கோவை: கோவையில் என் காலடி படாத இடமே இல்லை, கோவையில் வாங்கிய ஆர்மோனிய பெட்டியைத்தான் தற்பொழுதுவரை பயன்படுத்தி வருகிறேன் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்த ஆர்மோனிய பெட்டியைத்தான் தற்பொழுது வரை பயன்படுத்தி வருவதாக தெரிவித்த இசைஞானி இளையராஜா, கோவையை தன்னிடமிருந்து பிரிக்க முடியாது என தெரிவித்தார்.

கோவையில் இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இளையராஜா, தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சிறப்பு விருது வழங்கபட்டது.

இந்த நிகழ்வில் பேசிய இளையராஜா, நான் பேச்சாளர் கிடையாது, பாட்டாளி என தெரிவித்தார். பாட்டாளி என்பவன் பாடுபவன், பாடுபடுவன் வேலை செய்பவன் என தெரிவித்த அவர், என் பாடு வேறு, பாட்டாளிகள் அவங்க பாடு வேறு எனவும், என் பாடு பாட்டாகின்றது எனவும் தெரிவித்தார்.

எங்கெங்கோ சிற்றோடைகள் நதியாக ஒடுவதைப் போல, ஒரு நோக்கத்திற்காக இங்கே அனைவரும் வந்து இருக்கின்றீர்கள் என வந்த விளம்பரதாரர்களை வரவேற்றார். பின்பு பேசிய அவர், கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது எனவும், இங்கு ஆர்மோனியம் வசிக்காத இடங்களே கிடையாது எனவும் தெரிவித்தார்.

நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் செய்தது என தெரிவித்த அவர், என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார் எனவும், இப்போது வரை அது என்னிடம்தான் இருக்கின்றது, அதைப் பயன்படுத்தி வருகின்றேன் என தெரிவித்தார்.

கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு என்றுகூட சொல்ல முடியாது, கோவையை நான் பிரிவது கிடையாது என்று சொல்லலாம் என இசைஞானி இளையராஜா பேசினார். பின்னர் அனைத்து விளம்பரதாரர்களுடன் குழு குழுவாக இளையராஜா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையை தாக்குமா சென்யார் புயல்? புதிய தகவல்!

கிரிக்கெட் வாரியத்துடன் கருத்து வேறுபாடு.. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ராஜிநாமா!

ஆடி பிரியர்களுக்கு.. க்யூ3, க்யூ5 புதிய எடிஷன் அறிமுகம்!

நல்லாட்சி, கூட்டணி மாறும் கலை!நிதீஷ் குமாருக்கு 10 முறை முதல்வர் பதவி சாத்தியமானது எப்படி?

சர்வதேச திரைப்பட விழா! கோவா கிளம்பிய அமரன் குழு!

SCROLL FOR NEXT