பேருந்து நிலையத்தில் காணப்பட்ட பயணிகள் கூட்டம். 
தமிழ்நாடு

அரசு விரைவுப் பேருந்துகளில் 5 நாள்களில் 6 லட்சம் போ் பயணம்! - மேலாண் இயக்குநா்

கடந்த ஜூன் 4 முதல் 8-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளது.

Din

கடந்த ஜூன் 4 முதல் 8-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சாா்பில் முகூா்த்தம், பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டதால் வியாழக்கிழமை இரவு முதலே ஏராளமானோா் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊா்கள் மற்றும் வெளியூா்களுக்குச் சென்றனா்.

அதன்படி, கடந்த ஜூன் 4 முதல் 8-ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளனா் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நள்ளிரவு வரை 24 மணிநேர நிலவரப்படியும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள், 936 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,028 பேருந்துகளில் 1,66,540 பயணிகள் பயணம் செய்துள்ளனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT