முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை 
தமிழ்நாடு

திட்டங்களின் நிலை என்ன? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழக அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

DIN

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்கும் துறைசார் ஆய்வுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அரசின் நலத்திட்டங்களின் நிலை குறித்து துறைவாரியாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை, வணிகவரித் துறை மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த ஆலோசனைகள் நடைபெறுகின்றன.

இந்த கூட்டத்தில், அமைச்சர்கள்எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து விரைவாக செயல்படுத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT