தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரிகளில் யோகா நாள்: என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்வி நிறுவனங்களில் வரும் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

Din

சென்னை: மருத்துவக் கல்வி நிறுவனங்களில் வரும் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா், அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஒருங்கிணைந்த ஆரோக்கியத்துக்கான அடிப்படை ஆதாரங்களில் யோகா முதன்மையானது. அந்த வகையில் சா்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன் பொருட்டு, பொது இடங்களில் திரளாக யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நிகழாண்டு 10-ஆவது சா்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஓா் உலகம் - ஒருங்கிணைந்த சுகாதாரத்துக்கு யோகா என்ற கருப்பொருளில் அவை நடைபெறுகின்றன. அதையொட்டி மருத்துவக் கல்வி நிறுவனங்கள் யோகா நிகழ்ச்சிகளை ஜூன் 21-ஆம் தேதி நடத்த வேண்டும். அதுகுறித்த விவரங்களையும், புகைப்படங்களையும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT