கோப்புப்படம்  
தமிழ்நாடு

சென்னை, 18 மாவட்டங்களுக்கு இரவு வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

தமிழகத்தில் சென்னை உள்பட 19 மாவட்டங்களுக்கு இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாள்களுக்கு மிககனமழைக்கான எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அதேபோல், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றிரவு 10 மணிவரை திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தேனி, ராமநாதபுரம் மற்றும் நெல்லையில் லேசான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT