முகப்பு
தமிழ்நாடு

எம்.பி. ஆனார் கமல்! 6 பேர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 6 பேரும் தேர்வு.

Updated On : 12 ஜூன், 2025 at 7:03 PM
கமல்ஹாசன் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 12 ஜூன், 2025 at 6:48 PM

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

Advertisement

வேட்புமனு தாக்கலுக்காக தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலக கூடுதல் செயலா் சுப்பிரமணியம் தோ்தல் நடத்தும் அதிகாரியாகவும், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவைச் செயலக இணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனா். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Updated On : 12 ஜூன், 2025 at 6:55 PM

வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 13 போ் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேட்பு மனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில், சுயேச்சை வேட்பாளா்களுக்கு முன்மொழிவு கடிதம் இல்லை என்பதால் அவா்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சோ்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனர்.

இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியான சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்

Updated On : 12 ஜூன், 2025 at 6:57 PM

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025-ஆம் நாளன்று முடிவடைவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு கீழ்க்காணும் வேட்பாளர்கள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:- 

Updated On : 12 ஜூன், 2025 at 6:59 PM

திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: விமானம் எப்படி விபத்துக்குள்ளாகி இருக்கும்? விவரிக்கும் முன்னாள் விமானி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.