எடப்பாடி பழனிசாமி ENS
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பதிவு...

DIN

திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று மர்ம நபர்கள் புகுந்து சூறையாடியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,

"திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!

காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்ம நபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!

நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதல்வர் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இதுதான்!

உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே?

காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை.

வி. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன்- மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம்தான் பாதுகாப்பு!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் மேகவெடிப்பு! 28 பேர் கொண்ட கேரள சுற்றுலாக் குழு மாயம்!

புன்சிரிப்பு... ரகுல் ப்ரீத் சிங்!

கடந்த 3 வாரங்களில் உச்சம் தொட்ட எதிர்நீச்சல் -2 டிஆர்பி!

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! இன்று முழுவதும் ஒத்திவைப்பு!

மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

SCROLL FOR NEXT