தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை  
தமிழ்நாடு

நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும்: அண்ணாமலை

நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

DIN

நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெழுதிய மாணவர்களில், 76,181 மாணவர்கள், தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழக மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது. திமுக அரசு, இனியாவது தனது பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவு! அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை வெளியானது. அதில், திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 27-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT