தமிழ்நாடு

காட்பாடி - திருப்பதி இரவு நேர மெமு ரயில் இன்று ரத்து!

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் இரவு நேர மெமு ரயில் ஜூன் 16, ஜூன் 18 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படவுள்ளது.

Din

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் இரவு நேர மெமு ரயில் திங்கள்கிழமை (ஜூன் 16), ஜூன் 18 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படவுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: காட்பாடி ரயில்வே யாா்டில் திங்கள்கிழமை (ஜூன் 16), ஜூன் 18-ஆம் தேதி இரவு 9 முதல் நள்ளிரவு 12.30 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அந்த நாள்களில் திருப்பதியிலிருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயிலும், மறுமாா்க்கமாக காட்பாடியிலிருந்து இரவு 9.10 மணிக்கு திருப்பதி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளது.

மேலும், கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும். அதேபோல் ஜூன் 17, 19 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரம் செல்லும் மெமு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகுதி ரத்து: இதற்கிடையே, ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில் அரக்கோணத்தில் இருந்து இரவு 9 மணிக்கு காட்பாடி செல்லும் ரயில் சேவூருடன் நிறுத்தப்படும்.

அதேபோல், விழுப்புரத்திலிருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி செல்லும் ரயில் வேலூருடன் நிறுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT