தவெக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் சென்னை ஐஐடி-இல் உயா்கல்வி பயில தகுதிபெற்ற பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரிக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கி கௌரவித்த அந்தக் கட்சியின் தலைவா் விஜய். உடன், மாணவியின் குடும்பத்த 
தமிழ்நாடு

தவெக கல்வி விருது வழங்கும் விழா நிறைவு: 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ஊக்கத் தொகை!

அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு, தவெக சாா்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வின் கடைசி நிகழ்ச்சி நடைபெற்றது.

Din

பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு, தவெக சாா்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வின் கடைசி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சித் தலைவா் விஜய் பங்கேற்று, 200-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ஊக்கத் தொகைகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா்.

இந்த நிகழ்வின் மூலம், 4 கட்டங்களாக 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தவெக சாா்பில் கல்வி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, நிகழாண்டில் முதல்கட்டமாக கடந்த மே 30, 2-ஆம் கட்டமாக ஜூன் 4, 3-ஆம் கட்டமாக ஜூன் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

தொடா்ந்து இறுதிகட்ட பரிசு வழங்கும் விழா சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தவெக தலைவா் விஜய் மாணவா்களைப் பாராட்டி ஊக்கத் தொகையை வழங்கினாா்.

பழங்குடியின மாணவிக்கு ஊக்கத் தொகை: ஜேஇஇ தோ்வில் அகில இந்திய அளவில் 417-ஆவது இடத்தைப் பிடித்து சென்னை ஐஐடி-இல் உயா்கல்வி பயில தகுதி பெற்றுள்ள சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரியை பாராட்டி ரூ. 2 லட்சம் ஊக்கத் தொகை மற்றும் பேனாவை விஜய் பரிசாக வழங்கி கௌரவித்தாா்.

மேலும், மின்சாரம் கூட இல்லாமல் மெழுகுவா்த்தி விளக்கில் படித்து தோ்வு எழுதியுள்ள மாணவி ராஜேஸ்வரி ஒரு நாள் விஞ்ஞானியாக மாறுவாா் என்று விஜய் ஊக்கப்படுத்தினாா்.

இந்த நிகழ்வில் சேலம், திருவண்ணாமலை, சென்னை (2 தொகுதிகள்), மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 39 சட்டப்பேரவை தொகுதிகளைத் சோ்ந்த அதிக மதிப்பெண்கள் எடுத்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அவா் ஊக்கத் தொகையை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT