கோப்புப்படம் 
தமிழ்நாடு

வார விடுமுறை நாள்கள்: நெல்லைக்கு சிறப்பு ரயில்!

வரும் ஜூன் 21 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்.

DIN

சென்னையில் இருந்து நெல்லைக்கு வரும் ஜூன் 21 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 21 ஆம் தேதி சென்னை -நெல்லை இடையே தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 21 ஆம் தேதி(சனிக்கிழமை) இரவு 9.55-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.45-க்கு நெல்லை சென்றடையும்.

அதேபோல, எதிர் வழித்தடத்தில் நெல்லையிலிருந்து ஜூன் 22ம் தேதி (ஞாயிறு) இரவு 9.40-க்கு புறப்படும் இந்த ரயில், மறு நாள் காலை 8.15-க்கு எழும்பூர் வந்தடையும் என்றும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜூன்.18) தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.

இதையும் படிக்க: எம். ஜி. ஆர். தேடிக்கொண்டிருந்த ஜோதிடர் யார்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT