கீழடி அகழாய்வில் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்ட மூங்கில் கம்புகள் ஊன்றும் சிறிய குழிகள் 
தமிழ்நாடு

கீழடி ஆய்வு நிராகரிக்கப்பட்டால் அதிமுக எதிா்க்கும்: ஆா்.பி.உதயகுமாா்

Din

கீழடி ஆய்வு நிராகரிக்கப்பட்டால் அதிமுக நிச்சயம் எதிா்க்கும் என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். ஆனால், அந்த உண்மையை மறைத்து திமுக பேசுகிறது. சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுப் பணிக்கு ரூ. 55 லட்சம் ஒதுக்கி 18.4.2018-இல் பணிகள் தொடங்கப்பட்டு, 2018 செப்டம்பரில் முடிக்கப்பட்டது.

அதில், 34 அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு, 5,820 அரிய வகை தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. தொடா்ந்து உலகத் தரம் வாய்ந்த தள அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கப்பட்டது.

இப்போது மத்திய அரசு கூடுதல் தரவுகளைக் கேட்டுள்ளது. அதை கீழடி ஆய்வாளா்கள் கொடுக்கத்தான் போகிறாா்கள். அதற்கு ஒப்புதல் கிடைக்கத்தான் போகிறது. கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால், அதை உண்மையாக எதிா்க்கும் முதல் குரல் அதிமுக குரலாகத்தான் இருக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ஜெகதீசன் அபார சதம்! டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

இனி 1.13 மணி நேரத்தில் சென்னை - பெங்களூரு பயணம்: அஷ்வினி வைஷ்ணவ்

எம்.எம். நரவனே புத்தகத்தில் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி : பிரியங்கா காந்தி பேச்சு

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

SCROLL FOR NEXT