ஆம்ஸ்ட்ராங்  (கோப்புப்படம்)
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பற்றி...

DIN

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இதுவரை ரௌடி நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு என 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதாருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக கீனோஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்க ராசிக்கு எப்படி?

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

தெய்வ தரிசனம்... வழக்கு விவகாரங்களில் வெற்றி தரும் திருநாவலூர் திருநாவலேஸ்வரர்!

கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம்: வேலூா் சிறைகளில் வகுப்புகள் தொடக்கம்

வேலூா் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு நவீன சிறப்பு பிரிவு தொடக்கம்

SCROLL FOR NEXT