தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
மதுரையிலிருந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தின் சக்கரங்கள், கடையநல்லூர் அருகே இடைகால் என்ற பகுதியில் தனியாகக் கழன்று ஓடியது.
இதையும் படிக்க.. இஸ்ரேல் மீது ஏவப்படும் செஜ்ஜில் ஏவுகணை! அவ்வளவு மோசமானதா? முழு விவரம்
சக்கரங்கள் கழன்ற பேருந்தில், ஓட்டுநர், நடத்துநர் மற்றும் 87 பயணிகள் இருந்தனர். யாருக்கும் எந்தப் பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு சில பயணிகள் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடிரென, அதன் பின்பற்ற சக்கரங்கள் மட்டும், பேருந்திலிருந்து அச்சு உடைந்து இரண்டும் தனியாக சாலையில் கழன்றுவிட்டது. பேருந்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், அப்படியே தரையில் இழுத்தபடி சென்றது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை பத்திரமாக சாலையில் நிறுத்தினார்.
இந்த விபத்தில், பேருந்தின் படியில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்களுக்குக் கால்களில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் உடனடியாக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்துக்கு முன்போ, பின்னோ வேறு எந்த பெரிய வாகனங்களும் வராததால் நல்வாய்ப்பாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிக்க.. ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!
இந்த விபத்தினால், திருமங்கலம் - கொல்லம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து சாலையோரம் நகர்த்தப்பட்டு பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும், தனியாகக் கழன்றுபோன சக்கரத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.