விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என முருகன் மாநாடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"கீழடி விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவாக விளக்கமாகக் கூறிவிட்டார்.
ஒவ்வொருவரும் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை. அந்த அடிப்படையில் ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்பும் கடவுள்களை வழிபட மதுரையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநாடு நடத்துகின்றனர். அதற்கு வாழ்த்துகள்.
ஆங்கிலம் குறித்து அமித் ஷா பேசியது அவருடைய கருத்து. அவர் தாய்மொழி முக்கியம் என்றே சொல்லியிருக்கிறார். தாய்மொழிக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை ஆங்கிலத்திற்கு அதிகமாக கொடுக்கிறார்கள் என்ற பொறுப்பில்தான் பேசியிருக்கிறார்.
திமுக ஆட்சியில் மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை எல்லாம் மறைப்பதற்காக இதுபோன்ற கேலிச் சித்திரங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். 2026 தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவார்கள்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.