தமிழ்நாடு

700 கிலோ வெண்கலத்தாலான கருணாநிதி சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!

700 கிலோ வெண்கலத்தாலான கருணாநிதி சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.

DIN

வேலூர் அணைக்கட்டு அருகே கெங்கநல்லூா் சந்தை திடலில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞா் அறிவாலயம்’ அறிவுசாா் நூலக கட்டடத்தையும், 700 கிலோ வெண்கலத்தாலான முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூன் 25) வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள்
முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து, சாலை வழியாக திருப்பத்தூருக்கு புறப்பட்டு செல்லும் முதல்வருக்கு ஆம்பூரில் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இரவு 8 மணிக்கு திருப்பத்தூா் சென்றடையும் முதல்வர், அங்கு ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.

இதையும் படிக்க: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஆஸி. பேட்டிங்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அழகு மலர்கள்... ஜான்வி கபூர்!

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

2029 தேர்தலிலும் மோடியே பிரதமர் வேட்பாளர்! பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆர்எஸ்எஸ் பதில் என்ன?

SCROLL FOR NEXT