மிக கனமழைக்கு வாய்ப்பு 
தமிழ்நாடு

நீலகிரி, கோவையில் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

எங்கெல்லாம் கனமழை பெய்யும்.. வானிலை சொல்வதென்ன?

DIN

நீலகிரி, கோவையில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கீ.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை..

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குரும்பூா் அருகே கடையில் பூட்டை உடைத்து திருட்டு

கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விருது

தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சித் திட்டங்களில் அரசின் கடமைகள்

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வி

SCROLL FOR NEXT