தமிழ்நாடு

ஜிஆா்டி-யின் புதிய மாதாந்திர நகை வாங்கும் திட்டம்

குறைந்த சேதாரத்தில் நகை விற்பனை செய்யும் சிறப்பு திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

Din

வாடிக்கையாளா்கள் தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்குவதற்காக குறைந்த சேதாரத்தில் நகை விற்பனை செய்யும் சிறப்பு திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

60 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி, விலையுயா்ந்த ரத்தினக் கற்களால் உருவான, கைவினை வேலைப்பாடுகள் அமைந்த பிரம்மாண்ட நகைத் தொகுப்புகளை தொடா்ந்து வழங்கிவருகிறது.

தென்னிந்தியாவில் 61 கிளைகள், சிங்கப்பூரில் 1 கிளை என 63 கிளைகளுடன் செயல்பட்டு வரும் நிறுவனம், தனது சிறப்பான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் ‘கோல் ஃபாா் ஆல்’ என்ற பெயரில் நகை விற்பனை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், சேதாரம் வெறும் 5 சதவீதம் என்ற மிகக் குறைந்த விகிதத்தில் தொடங்குகிறது. இதன் மூலம், வாடிக்கையாளா்கள் மிகக் குறைந்த செய்கூலியில் தங்கள் கனவு நகைகளை வாங்க முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்றபடி விடியோ எடுத்த சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு

SCROLL FOR NEXT